Too good. Thank you, Sir
ஓங்காரம் (பிரணவம்)
எந்த மொழியிலும்
எழுத்துகள் பிறப்பதற்கு
மூல காரணமாக இருப்பது
ஒலியே. அந்த ஒலியே
பிரணவம் எனப்படும்.
வாயைத் திறந்து
உள்ளிருக்கும் மூச்சுக்
காற்றை
வெளியிடும்போது ‘ஓ’
என்ற உருவமற்ற ஒலி
பிறக்கின்றது.
அவ்வொலியின் கடைசியில்
வாயை மூடும்போது ‘ம்’
என்ற ஒலி தோன்றுகிறது.
இந்த ”ஓம் – ஓம்” என்ற
ஒலியையே பிரணவம் என்று
கூறுவர்.
ஓம் என்னும் மூலமந்திரம்,
இறைவனை அம்மையப்பனாக
வுணர்த்தும்
ஒலிவடிவாகும். அது ஓ
என்னும் ஒரே யெழுத்தே.
இன்னிசைபற்றி மகர ஈறு
சேர்க்கப்பட்டது. ஓங்காரம்
எனினும் ஓகார மெனினும்
பொருளளவில் ஒன்றே.
வடமொழியில் அகரவுகரம்
புணர்ந்து (குல +
உத்துங்கன் =
குலோத்துங்கன்
என்பதுபோல்) ஓகாரமாவது
நோக்கியும், எழுத்துப்
பேறான மகரத்தைச்
சொல்லுறுப்பாகக்
கொண்டும், ஓம் என்பதை அ +
உ + ம் எனப் பிரித்து, அம்
மூவெழுத்தும் முறையே
முத்திரு மேனியரையுங்
குறிக்குமென்றும்,
சிவனையும்
சிவையையும்
மாயையையுங்
குறிக்குமென்றும்,
ஆதனையும்
(ஜீவாத்துமாவையும்)
பரவா தனையும்
(பரமாத்துமாவையும்)
மாயையையுங் குறிக்கு
மென்றும், பலவாறு
கூறுவர்.
ஓங்காரம் ஒரேயெழுத்
தென்பதை,
“ஓரெழுத் தாலே
யுலகெங்குந்
தானாகி” (திருமந்திரம் 765)
“ஆறெழுத் தோதும்
அறிவார்
அறிகிலர்” (திருமந்திரம் 941)
என்பவற்றாலும், ஓங்காரம்
அம்மையப்பனையுணர்த்தும்
எழுத் தென்பதை
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே
ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே
உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே
பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம்
ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-
ஓங்காரத் துள்ளே யுதித்த
View original post 1,024 more words